Saturday, September 11, 2010

கவனத்திற்கு...........

இப்பக்கத்தைப் பற்றித் தங்கள் கருத்துகள் பெரிதும் வரவேற்கப்படுகின்றன. தங்கள் கருத்துகளின் வழி, மேலும் பல தகவல்களை வழங்க முடியும் என நினைக்கிறேன். தயவு செய்து, தங்கள் கருத்துகளைப் பதியுங்கள்.

தமிழ்க் கிறுக்கன்.....

பிரிவு இ : திறந்த முடிவுக் கட்டுரை

1. விளக்கக் கட்டுரை
2. வடிவமைப்புக் கட்டுரை
3. கற்பனைக் கட்டுரை

2010 க்கான முக்கியத் தலைப்புகள்

1. விளக்கக் கட்டுரை

அ. புறப்பாட நடவடிக்கைகள்
ஆ. விளையாட்டினால் ஏற்படும் நன்மைகள்
இ. நான் போற்றும் ஒரு தலைவர்


2. வடிவமைப்புக் கட்டுரைகள்
அ. நண்பனுக்குக் கடிதம் - பள்ளியில் நடைபெற்ற தேசிய தினக் கொண்டாட்டம்
ஆ.தொழிற்சாலை ஒன்றினைச் சுற்றிப் பார்க்க வேண்டி, அதன் நிர்வாகிக்கு
ஒரு கடிதம்.
இ. அறிக்கை - போட்டி விளையாட்டு அறிக்கை

3. கற்பனைக் கட்டுரை
அ. நான் இயந்திர மனிதன் ஆனால்....
ஆ. நான் ஓட்ட விரும்பும் ஓர் அதிசய மிதிவண்டி
இ. நடக்கப் போவதை முன்கூட்டியே அறியும் ஆற்றல் எனக்குக் கிடைத்தால்..

Friday, September 10, 2010

வழிகாட்டிக் கட்டுரை

ஒரு நல்ல வழிகாட்டிக் கட்டுரைக்கு இருக்க வேண்டிய கூறுகள்...

அ. முதலில் ஒரு கதை எழுத வேண்டும் என்பதைப் புரிந்து கொள்ளுங்கள். ஒரு கதைக்கு இருக்க வேண்டிய கூறுகள் அவற்றில் இருக்க வேண்டும்.

1. தொடக்கம் -திருப்பம் - முடிவு இருக்க வேண்டும்.
2. கதை என்பது ஒரு முக்கிய கதாபாத்திரத்தைச் சுற்றி அமைய வேண்டும்.
3. கதையில் எதிர்மறைக் கதாபாத்திரம்/கதாபாத்திரங்கள் அமைய வேண்டும்.
4. கதாநாயகத் தன்மை, அவன்/அவள் எதிர்நோக்கும் சவால்கள் குறிக்கப்பட
வேண்டும்.
5. முடிவு என்பது எல்லோரும் எதிர்பார்ப்பதைப் போன்று அமையாமல் இருப்பது
கதைக்கு மேலும் மெருகூட்டும்.

சரி, ஒரு மாதிரி கதையைப் பார்ப்போமா.............

கீழ்க்காணும் படத்திற்கு ஏற்ப ஒரு கதை எழுதுக.


அ. படத்தின் கருப்பொருள் எது என்பதை அடையாளம் காண்க.
-ஒரு கடத்தல் சம்பவம்.. குழந்தைகளைக் கடத்தல்... காரணம்
கொள்ளைச்சம்பவத்தைப் பார்த்து விட்டார்கள்.

ஆ. முதன்மைக் கதாபாத்திரம்
- மரத்தின் பின்னால் ஒளிந்திருப்பவன்... தன் நண்பர்களைக் காப்பாற்ற அவன்
எடுத்துக் கொள்ளும் முயற்சி
- எதிர்மறைக் கதாபாத்திரம் - கடத்தல்காரர்கள் -

இ. திருப்பம்
- கடத்தல்காரர்கள் பார்த்து விட்டார்களா ...... இல்லை பார்க்கவில்லையா...
எவ்வாறு காப்பாற்றப்படுகிறார்கள்....

ஈ. முடிவு - முடிவில் நன்னெறிக் கூறுகளைப் புகுத்த முயற்சிக்க வேண்டாம்

------------------------------------------------------------------------------------------
தொடக்கம்
- கட்டுரை வகையில் அமைவதைத் தவிர்க்க வேண்டும்.
மாதிரி :
- ஓர் ஊரில் நான்கு நண்பர்கள் வாழ்ந்து வந்தார்கள்....
- முகிலன் மிகவும் தைரியசாலி.
மாதிரித் தொடக்கம் :
வழக்கத்தைவிட அன்று புறப்பாட நடவடிக்கைகள் தாமதமாக முடிந்தன. ஆசிரியரிடம் பேச வேண்டியிருந்ததால், தன் நண்பர்களை முதலில் அனுப்பி விட்டு கபிலன் பிறகு வருவதாக கூறினான்.


தங்களின் கருத்துகள்...............


தங்களின் கருத்துகளைப் பதிவு செய்யவோ அல்லது விளக்கங்கள் வேண்டவோ, என் மின்னஞ்சல் முகவரியில் தொடர்பு கொள்ளவும்..

vaye6369@gmail.com

பிரிவு அ : வாக்கியம் அமைத்தல்

கவனிக்க வேண்டியவை:

1. வாக்கியம் ஒரே வாக்கியமாக இருக்க வேண்டும். வாக்கியத்தில் கண்டிப்பாக குறிப்புச் சொல்
இடம் பெற்றிருக்க வேண்டும். குறிப்புச்சொல்லுடன் இலக்கணப் பிழையின்றி எழுதப்படும்
வாக்கியங்களே 2 1/2 புள்ளிகள் பெறும்.

சில மாதிரி வாக்கியங்கள்

அ. தோல்
குரங்கு வாழைப்பழத்தின் தோலை உரித்துச் சாப்பிட்டது.
வாழைப்பழத் தோல் என்று எழுதப்பட்டால் அது பெயர்ச்சொல் என்று அர்த்தம்
கொள்ளப்பட்டு, புள்ளிகள் இழக்க நேரிடும்.

ஆ. தோள்
அப்பா விறகுகளைத் தனது தோளில் சுமந்து வந்தார்.
தோள் பட்டையில் சுமந்து வந்தார் என்று எழுதப்பட்டால், வேறொரு பெயர்ச்சொல்
என்று பொருள் கொள்ளப்பட்டு, புள்ளிகள் இழக்க நேரிடும்.

இ. வனம்
வேட்டைக்காரன் வனத்திற்குச் சென்று மிருகங்களை வேட்டையாடினான்.
இராமன் பதினான்கு ஆண்டுகள் வனவாசம் சென்றார் என்று எழுதப்பட்டால் '0'
புள்ளிகளே வழங்கப்படும்.காரணம், வனவாசம் என்பது பெயர்ச்சொல்.

ஈ. வானம்
வானத்தில் மேகம் கருத்து இருந்ததால், மழை வரும் என்று அப்பா கூறினார்.


மாணவர்கள் தங்கள் வாக்கியங்களில் அடை, வேற்றுமை உருபு, விகுதி போன்வற்றைத் தாராளமாக இணைத்துக் கொள்ளலாம். மாதிரி ....

அழகு - அழகான ( அடை ), அழகை ( வேற்றுமை உருபு ), அழகும் ( விகுதி )

உ. அலகு - பறவை தன் கூறிய அலகால் இரையைக் கொத்தித் தின்றது.

ஊ. அழகு - மணப்பெண் பட்டுப் புடவையில் மிகவும் அழகாகத் தோன்றினாள்.

எ. இரை - பறவை தன் கூறிய அலகால் இரையைக் கொத்தித் தின்றது.

ஏ. இறை - கீழே இறைந்து கிடந்த அரிசியைக் கோழி கொத்தித் தின்றது.