Friday, September 10, 2010

வழிகாட்டிக் கட்டுரை

ஒரு நல்ல வழிகாட்டிக் கட்டுரைக்கு இருக்க வேண்டிய கூறுகள்...

அ. முதலில் ஒரு கதை எழுத வேண்டும் என்பதைப் புரிந்து கொள்ளுங்கள். ஒரு கதைக்கு இருக்க வேண்டிய கூறுகள் அவற்றில் இருக்க வேண்டும்.

1. தொடக்கம் -திருப்பம் - முடிவு இருக்க வேண்டும்.
2. கதை என்பது ஒரு முக்கிய கதாபாத்திரத்தைச் சுற்றி அமைய வேண்டும்.
3. கதையில் எதிர்மறைக் கதாபாத்திரம்/கதாபாத்திரங்கள் அமைய வேண்டும்.
4. கதாநாயகத் தன்மை, அவன்/அவள் எதிர்நோக்கும் சவால்கள் குறிக்கப்பட
வேண்டும்.
5. முடிவு என்பது எல்லோரும் எதிர்பார்ப்பதைப் போன்று அமையாமல் இருப்பது
கதைக்கு மேலும் மெருகூட்டும்.

சரி, ஒரு மாதிரி கதையைப் பார்ப்போமா.............

கீழ்க்காணும் படத்திற்கு ஏற்ப ஒரு கதை எழுதுக.


அ. படத்தின் கருப்பொருள் எது என்பதை அடையாளம் காண்க.
-ஒரு கடத்தல் சம்பவம்.. குழந்தைகளைக் கடத்தல்... காரணம்
கொள்ளைச்சம்பவத்தைப் பார்த்து விட்டார்கள்.

ஆ. முதன்மைக் கதாபாத்திரம்
- மரத்தின் பின்னால் ஒளிந்திருப்பவன்... தன் நண்பர்களைக் காப்பாற்ற அவன்
எடுத்துக் கொள்ளும் முயற்சி
- எதிர்மறைக் கதாபாத்திரம் - கடத்தல்காரர்கள் -

இ. திருப்பம்
- கடத்தல்காரர்கள் பார்த்து விட்டார்களா ...... இல்லை பார்க்கவில்லையா...
எவ்வாறு காப்பாற்றப்படுகிறார்கள்....

ஈ. முடிவு - முடிவில் நன்னெறிக் கூறுகளைப் புகுத்த முயற்சிக்க வேண்டாம்

------------------------------------------------------------------------------------------
தொடக்கம்
- கட்டுரை வகையில் அமைவதைத் தவிர்க்க வேண்டும்.
மாதிரி :
- ஓர் ஊரில் நான்கு நண்பர்கள் வாழ்ந்து வந்தார்கள்....
- முகிலன் மிகவும் தைரியசாலி.
மாதிரித் தொடக்கம் :
வழக்கத்தைவிட அன்று புறப்பாட நடவடிக்கைகள் தாமதமாக முடிந்தன. ஆசிரியரிடம் பேச வேண்டியிருந்ததால், தன் நண்பர்களை முதலில் அனுப்பி விட்டு கபிலன் பிறகு வருவதாக கூறினான்.


No comments: