Friday, September 10, 2010

பிரிவு அ : வாக்கியம் அமைத்தல்

கவனிக்க வேண்டியவை:

1. வாக்கியம் ஒரே வாக்கியமாக இருக்க வேண்டும். வாக்கியத்தில் கண்டிப்பாக குறிப்புச் சொல்
இடம் பெற்றிருக்க வேண்டும். குறிப்புச்சொல்லுடன் இலக்கணப் பிழையின்றி எழுதப்படும்
வாக்கியங்களே 2 1/2 புள்ளிகள் பெறும்.

சில மாதிரி வாக்கியங்கள்

அ. தோல்
குரங்கு வாழைப்பழத்தின் தோலை உரித்துச் சாப்பிட்டது.
வாழைப்பழத் தோல் என்று எழுதப்பட்டால் அது பெயர்ச்சொல் என்று அர்த்தம்
கொள்ளப்பட்டு, புள்ளிகள் இழக்க நேரிடும்.

ஆ. தோள்
அப்பா விறகுகளைத் தனது தோளில் சுமந்து வந்தார்.
தோள் பட்டையில் சுமந்து வந்தார் என்று எழுதப்பட்டால், வேறொரு பெயர்ச்சொல்
என்று பொருள் கொள்ளப்பட்டு, புள்ளிகள் இழக்க நேரிடும்.

இ. வனம்
வேட்டைக்காரன் வனத்திற்குச் சென்று மிருகங்களை வேட்டையாடினான்.
இராமன் பதினான்கு ஆண்டுகள் வனவாசம் சென்றார் என்று எழுதப்பட்டால் '0'
புள்ளிகளே வழங்கப்படும்.காரணம், வனவாசம் என்பது பெயர்ச்சொல்.

ஈ. வானம்
வானத்தில் மேகம் கருத்து இருந்ததால், மழை வரும் என்று அப்பா கூறினார்.


மாணவர்கள் தங்கள் வாக்கியங்களில் அடை, வேற்றுமை உருபு, விகுதி போன்வற்றைத் தாராளமாக இணைத்துக் கொள்ளலாம். மாதிரி ....

அழகு - அழகான ( அடை ), அழகை ( வேற்றுமை உருபு ), அழகும் ( விகுதி )

உ. அலகு - பறவை தன் கூறிய அலகால் இரையைக் கொத்தித் தின்றது.

ஊ. அழகு - மணப்பெண் பட்டுப் புடவையில் மிகவும் அழகாகத் தோன்றினாள்.

எ. இரை - பறவை தன் கூறிய அலகால் இரையைக் கொத்தித் தின்றது.

ஏ. இறை - கீழே இறைந்து கிடந்த அரிசியைக் கோழி கொத்தித் தின்றது.

No comments: